தொழுதூரில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்


தொழுதூரில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 7:49 AM IST)
t-max-icont-min-icon

தொழுதூரில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

கடலூர்


ராமநத்தம் அடுத்த தொழுதூரில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், செல்லியம்மன் எழுதருளி அருள்பாலிக்க, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது தான் தேரோட்டம் நடந்தது. இதனால் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


Next Story