தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரை


தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரை
x
தினத்தந்தி 16 Dec 2022 1:00 AM IST (Updated: 16 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாய நுரை உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாகவே ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம்வரை நீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்தது. ஆனபோதிலும் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரை செல்கிறது. தொடர்ந்து 3 நாட்களாக ரசாயன நுரை பொங்கி சென்ற நிலையில் நேற்றும் 4-வது நாளாக ரசாயன நுரை அதிகளவில் ஆற்றில் சென்றது. இதனால் ஓசூர் பகுதிகளில் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story