பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஊசி; தென்காசியில் 100 கிலொ தர்பூசணி அழிப்பு - அதிகாரிகள் நடவடிக்கை


பழங்களை பழுக்க வைக்க ரசாயன ஊசி; தென்காசியில் 100 கிலொ தர்பூசணி அழிப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
x

தர்பூசணியை பழுக்க வைக்கவும், சிவப்பு நிறம் ஏற்றவும் பழங்களில் ரசாயண ஊசி போடப்படுவதாக புகார்கள் எழுந்தன.

தென்காசி,

தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ஏராளமான தர்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் தர்பூசணி பழங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே முக்கால் விளைச்சல் இருக்கும் பழங்களை கொண்டு வந்து அவற்றை பழுக்க வைக்கவும், சிவப்பு நிறம் ஏற்றவும் பழங்களில் ரசாயண ஊசி போடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள சில வியாபாரிகள் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட பழங்களை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 100 கிலோ தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை பிரிக்கும் இடத்தில் வைத்து அழித்தனர்.



Next Story