மறைமலைநகர் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு


மறைமலைநகர் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

மறைமலைநகர் நகராட்சியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

வாக்குப்பதிவு எந்திரங்கள்

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் என 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள 7 ஆயிரத்து 322 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,001 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் 4 ஆயிரத்து 307 கருவிகள் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

கிடங்கு அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராகுல்நாத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், முன்னிலையில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பான நடைமுறைப்படி வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டம் தோறும் ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப வல்லுனர்கள்

வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு பாரத மின்னணு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று, தொழில்நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கினர்.

இந்த பொறியாளர்கள் பணி முடியும் வரை நமது மாவட்டத்தில் தங்கி பணியினை முடிப்பார்கள்.

முதல் நிலை சரிபார்ப்பு பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த பணிகளை மேற்கொள்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணியாளது ஒரு மாத காலம் நடைபெறும். இந்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்

இந்த பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மறைமலைநகர் நகராட்சி ஆணையர், செங்கல்பட்டு தாசில்தார், தேர்தல் தாசில்தார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Next Story