செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
x

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள். டாக்டர்கள், நர்சுகள் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டியது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள்.

இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிறிது நேரம் சிகிச்சை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டுவதை நோயாளிகள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனடியாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தலையிட்டு அந்த வார்டில் இருந்த நோயாளிகளை வேறு சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர்.

1 More update

Next Story