பேரணியில்சென்ன கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


பேரணியில்சென்ன கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:46 PM GMT)

பேரணியில் சென்ன கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம்


மயிலம்,

மயிலம் ஒன்றியம் பேரணி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத சென்னகேசவ பெருமாள் மற்றும் ராதா ருக்மணி சமேத சந்தன கோபாலகிருஷ்ண சாமி கோவில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ந்தேதி கோ பூஜையுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்து, நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்து கடம்புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சந்தன கோபாலகிருஷ்ணர் கோவிலுக்கும், காலை 9.50 மணிக்கு சென்ன கேசவ பெருமாள் கோவில் விமான கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சர்வ சாதகம் வரதராஜ பட்டர் தலைமையில் ஆலய அர்ச்சகர் கண்ணபிரான் மற்றும் குழுவினர் யாகசாலை பூஜைகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story