சென்னை: பழவந்தாங்கலில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் எரிந்து சேதம்


சென்னை: பழவந்தாங்கலில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் எரிந்து சேதம்
x

சென்னை, பழவந்தாங்கலில் இன்று அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

சென்னை,

சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் காந்திமணி, ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 2 கார்கள் அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் எப்படி? தீ பிடித்தது, கார்களை மர்ம நபர்கள், எரித்தார்களா? என்பது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story