சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு


சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
x

சென்னையில் பபாசி சார்பில் நடைபெற்று வந்த புத்தக்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளா சங்கம் (ப்பாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.6) தொடங்கியது. இதில் 1000 அரங்குகள் உள்ளன.

கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

புத்தக காட்சி வளாகத்தில் உள்ள சிற்றரங்கம், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கில் மாலையில் சிறப்பு உரையரங்கங்களும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

புத்தக காட்சி நிறைவு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அரங்க மகாதேவன் கலந்துகொண்டு பேசுகிறார்.

நிகழ்ச்சியில் பதிப்பகத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு துணைபுரிந்தவர்கள்ஆகியோர் கௌரவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படுகின்றன.

1 More update

Next Story