சென்னை கார் டிரைவர் மர்மச்சாவு


சென்னை கார் டிரைவர் மர்மச்சாவு
x

போளூருக்கு வந்த சென்னை கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தினகரன். துணை கலெக்டரான இவர் தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார்.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் இந்த வழக்கு விஷயமாக வேலூர் கோர்ட்டுக்கு ஆஜராக சென்னையில் இருந்து தனது சொந்த காருக்கு ஆக்டிங் டிரைவராக சென்னை பாடியில் உள்ள பால்பாண்டி (வயது 55) என்பவரை நியமித்து சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து போளூரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். வீட்டு மாடியில் பால்பாண்டி தங்கினார்.

இந்த நிலையில் இரவு பால்பாண்டி போளூர் பஸ் நிலையம் வந்து ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு, நடந்து வந்த போது குடிபோதையில் சாலையில் விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது.

பின்னர் அங்கு சிப்பந்தி பழனி என்பவர் அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். சிகிச்சை பெற்ற பின் பால்பாண்டி தினகரன் வீட்டு மாடியில் படுத்து தூங்கினார்.

நேற்று காலை 6 மணி அளவில் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் தினகரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பால்பாண்டி இறந்து கிடந்தார்.

இதையடுத்து தினகரன் சென்னையில் உள்ள பால்பாண்டியின் மகன் கணபதி பாண்டியனுக்கு தகவல் கூறினார். இதுகுறித்து கணபதி பாண்டியன் போளூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பால்பாண்டிக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம் ஆகும்.


Next Story