"வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை ஐகோர்ட் முதலிடம்" - தலைமை நீதிபதி பெருமிதம்


வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை ஐகோர்ட் முதலிடம் - தலைமை நீதிபதி பெருமிதம்
x

வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை ஐகோர்ட் முதலிடத்தில் உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பாண்டாரி தெரிவித்துள்ளார்.

மதுரை,

ஐகோர்ட் மதுரைக் கிளையின் 18-வது ஆண்டு விழா மற்றும் ஐகோர்ட் மதுரைக் கிளை பார் அசோசியேஷன் (எம்.எம்.பி.ஏ.) 17-வது ஆண்டு விழா ஆகியன மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, "நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை ஐகோர்ட் முதலிடத்தில் உள்ளது. இதில் மதுரைக் கிளையின் பங்கு அதிகம். கொரோனா காலத்தில் அதிகளவில் வழக்குகளை விசாரித்து சென்னை ஐகோர்ட்டும், அதன் மதுரைக் கிளையும் சாதனை படைத்துள்ளது.

இது வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது. வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் நம்பிக்கை அளிக்க வேண்டும்."

இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.


Next Story