குரோம்பேட்டையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம்


குரோம்பேட்டையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம்
x

குரோம்பேட்டையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

சென்னை பெருநகர பகுதிகளுக்கான மூன்றாம் முழுமை திட்டம் 2027-2042 தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் குறித்து பொதுமக்களிடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மண்டலம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுநல சங்கங்கள், பொதுமக்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை விளக்கி பேசினர். தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். முக்கிய சாலைகளில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும். குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.

அப்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பேச வாய்ப்பு தருவதாக கூறி கூட்டத்தில் பங்கேற்ற சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேற முயன்றனர். அவர்களை எம்.எல்.ஏ. சமாதானம் செய்தார்.

1 More update

Next Story