சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏசி விழுந்து ஊழியர் பலி...!
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசிவிழுந்து விபத்தில், ஊழியர் ஒருவர் பலியானார்.
சென்னை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் காண்ட்ராக்ட் வேலை செய்து வரும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு (62) என்பவர் இன்று மதியம் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார்.
அப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டவர் 2, மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கழண்டு திருநாவுக்கரசு தலையில் விழுந்து உள்ளது. தலையில் பலமாக அடிபட்டதால் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த திருநாவுக்கரசை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் திருநாவுக்கரசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story