சென்னை-ராமநாதபுரம் விமான போக்குவரத்தை விரைந்து தொடங்க வேண்டும்


சென்னை-ராமநாதபுரம் விமான போக்குவரத்தை விரைந்து தொடங்க வேண்டும்
x

சென்னை-ராமநாதபுரம் விமான போக்குவரத்தை விரைந்து தொடங்க வேண்டும் என்று மத்திய விமானத்துறை மந்திரியிடம் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் ராமநாதபுரம் விமான நிலையம் எப்போது அமைக்கப்படும் என நான் எழுப்பிய கேள்விக்கு விரைவில் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை தொடங்கப்படும் என பதிலளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ராமநாதபுரம் விமான நிலைய பணிகளை துரிதப்படுத்தி விரைவில் விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட பலர் மலேசியாவில் வணிகரீதியாக வசிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு வந்து செல்லும் வகையில் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும். அதேபோல சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story