சென்னையில் 4 நாட்களில் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிவு


சென்னையில் 4 நாட்களில் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிவு
x

சென்னையில் கடந்த 4 நாட்களில் மட்டும் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

சென்னை,

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அக்டோபர் மாதம் இறுதியில் பருவமழை தொடங்கினாலும், அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து பதிவாகும் மழை அளவு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி, 41 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பைவிட 27 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரையிலான நிலவரப்படி, சென்னையில் 14 செ.மீ. மழைதான் பதிவாகியிருந்தது. அப்போது இயல்பைவிட 48 சதவீதம் குறைந்திருந்தது.

சென்னையில் கடந்த மாதம் 31-ந் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, கடந்த 4 நாட்களில் மட்டும் சராசரியாக 27 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இயல்பைவிட மழை குறைந்திருந்த நிலையில், தற்போது இயல்பை காட்டிலும் அதிகம் மழை பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story