சென்னை சங்கமம் திருவிழா நிறைவு - இறுதிநாளில் களைகட்டிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்


சென்னை சங்கமம் திருவிழா நிறைவு - இறுதிநாளில் களைகட்டிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
x

சென்னை சங்கமம் திருவிழாவின் இறுதி நாளான இன்று பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய 'சென்னை சங்கமம் திருவிழா' கடந்த 13-ந்தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக தீவுத்திடலில் பிரமாண்டமான கலை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று, கலை அரங்கில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள் என பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை சங்கமம் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் என கிட்டத்தட்ட 16 இடங்களில் மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை சங்கமம் நிகழ்ச்சி முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்டது. அதற்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story