சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!


சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!
x
தினத்தந்தி 27 May 2022 2:51 AM GMT (Updated: 2022-05-27T11:21:57+05:30)

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story