செஸ் விழிப்புணர்வு போட்டி
ஆம்பூர் நகராட்சியில் செஸ் விழிப்புணர்வு போட்டிநடந்தது.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆம்பூர் நகராட்சி அளவிலான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். முன்னதாக ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ், ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவர் ஆறுமுகம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.