பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி


பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி
x

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி

திருவண்ணாமலை

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

இதில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 17-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.

போட்டியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி, உதவி கலெக்டர் வீ.வெற்றிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடரமணன், சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்.என்.நேரு,

பள்ளி முதல்வர் என்.மகாதேவன், தாசில்தார் சுரேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (திருவண்ணாமலை) முத்துவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story