செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x

திண்டுக்கல்லில் செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

சுதந்திர தினவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்ட அளவில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி, திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி ஹலோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செஸ் கழகத்தின் சார்பில் டாக்டர் கருணாகரன் போட்டியை நடத்தி வைத்தார். இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு செட்டிநாடு சிமெண்ட் கரிக்காலி கிளை தலைவர் கிருஷ்ணன் பரிசு வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஹலோ கிட்ஸ் மழலையர் பள்ளி தாளாளர் தாமரை ஜெயக்குமார், சர்வேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் துணை தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story