பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் திருவாரூர் மாவட்ட 'செஸ் சாம்பியன்ஷிப்' போட்டி


பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில்  திருவாரூர் மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
x

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் திருவாரூர் மாவட்ட ‘செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி நடக்க உள்ளது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே பூவனூரில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானே 'செஸ்' விளையாடியதாக தலவரலாறு கூறுகிறது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் திருவாரூர் மாவட்ட 'செஸ் சாம்பியன்ஷிப்' போட்டி வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த செஸ் வீரர்கள் 200 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நீடாமங்கலம் வட்ட சதுரங்க கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் செய்து உள்ளனர்.

1 More update

Next Story