செஸ் விளையாட்டு போட்டி
செஸ் விளையாட்டு போட்டி நடந்தது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 14 பேர், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 70 பேர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 16 பேர் கொண்டு செஸ் விளையாட்டு போட்டி 3 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள் ஒரு பிரிவாகவும், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒரு பிரிவாகவும், பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு பிரிவாகவும் 3 கட்டமாக போட்டிகள் நேற்று தொடங்கி, இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துசெல்வன் தெரிவித்தார்.