நெல்லையில் செஸ் போட்டி


நெல்லையில் செஸ் போட்டி
x

ஒலிம்பியாட் போட்டியை பார்வையிடுபவர்களை தேர்வு செய்ய நெல்லையில் செஸ் போட்டி நடந்தது.

திருநெல்வேலி

மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முதன் முதலாக வருகிற ஜூலை மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் தலா 2 பேர் வீதம் பார்வையாளராக கலந்து கொள்ளவும், அங்கு வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான தேர்வு போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியை நெல்லை மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழக தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். செயலாளர் பால்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வமணிகண்டன் நடுவராக செயல்பட்டார். இதில் இணை செயலாளர்கள் முருகானந்த் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார்கள்.

இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டி இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படுகிறது. போட்டி முடிவில் சிறந்த ஒரு மாணவன், ஒரு மாணவி தேர்வு செய்யப்பட்டு மாமல்லபுரம் ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.


Next Story