செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட்
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரன்பிள்ளை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் செஸ் பலகை வடிவத்திலும், குதிரை வடிவத்திலும், மனித சங்கிலியால் வடிவமைத்து காண்பித்தனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மகிழ்விக்கும் பொருட்டு செல்பி பாயிண்ட் உருவாக்கப்பட்டது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். செஸ் ஒலிம்பியாட் உறுதிமொழி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்
பள்ளி அளவில் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பரிசுகளை வழங்கினார்.
பள்ளி அளவில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. முடிவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.






