செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தென்காசியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி- கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

தென்காசி

சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரமாண்டமாக நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி குறித்து

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் காவல்துறை சார்பில் தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் முன்பு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது கோவில் முன்பு விளையாட்டு போட்டியின் சின்னங்கள் மற்றும் விளையாடும்போது பயன்படுத்தப்படும் காய்கள் ஆகியவற்றின் பதாகைகளை போலீசார் கைகளில் வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளும் இதுகுறித்த பதாகைகளை கைகளில் ஏந்தி கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

கோவில் ரதவீதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

இதேபோன்று குற்றாலத்திற்கு வருகை தந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



Next Story