!-- afp header code starts here -->

கடலூரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்


கடலூரில்    செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி    கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
x

கடலூரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர், ஸ்ரீவள்ளிவிலாஸ் பொன்னகைக்கூடம் சீனிவாசன் மற்றும் ரமேஷ், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கேசினோ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து மல்யுத்த வீரர்கள் பலர் கலந்து கொண்டு மல்யுத்த பாணியிலேயே யானை, மந்திரி, குதிரை, சிப்பாய் போன்று நடித்து செஸ் விளையாடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் முதல்முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற போட்டியை போன்று செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாடி காண்பித்தனர்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, நகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சுபாஷினி ராஜா, வக்கீல் அணி கார்த்திக், மாவட்ட சதுரங்க கழக செயலாளர் பாண்டியன், துணை தலைவர் கலைச்செல்வன், துணை செயலாளர் பிரேம்குமார், தேசிய நடுவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story