செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி
x

மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14,17,19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு செஸ் போட்டி மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செஸ் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.


Next Story