செஸ் ஒலிம்பியாட்: தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை
செஸ் ஒலிம்பியாட் பணிகள் குறித்து தலைமைச்செயலர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து நேற்று தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தலைமைச் செயலகத்தில் மாலை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
Related Tags :
Next Story