செஸ் ஒலிம்பியாட் போட்டியால் கிராமங்களில் கூட செஸ் பற்றிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் மெய்யநாதன்


செஸ் ஒலிம்பியாட் போட்டியால் கிராமங்களில் கூட செஸ் பற்றிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது -  அமைச்சர் மெய்யநாதன்
x

மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியால் கிராமங்களில் கூட மக்களிடையே செஸ் பற்றிய ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செஸ் ஒலிம்பியாட் போட்டி குழுவினருடன் வருகை தந்தார். பிறகு அமைச்சர் மெய்யநாதன் செஸ் போட்டி நடைபெறும் அரங்கில் நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது,

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிமிபியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என இருபிரிவினர் பங்கேற்கும் 343 அணிகள் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 20-ம் தேதி அனைத்து பணிகள் முடிக்கப்படும். 7-ம் நூற்றாண்டில் தோன்றிய செஸ் போட்டி இங்கு தமிழக முதல்வர் மூலம் தொடங்கி வைப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்தில் கிராமங்களில் கூட பள்ளி மாணவர்கள், மக்களிடையே செஸ் போட்டி பற்றிய ஆர்வம், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் 2148 அணிகள் பங்கேற்ற செஸ் போட்டியானது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் மெய்யாதன் கூறினார்.


Next Story