செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாரத்தான் - அமைச்சர்கள், சென்னை மேயர் பங்கேற்பு


செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாரத்தான் -  அமைச்சர்கள், சென்னை மேயர் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 July 2022 3:45 AM GMT (Updated: 24 July 2022 4:34 AM GMT)

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் செஸ் ஆட்டத்தில் மிகஉயரிய போட்டியான இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உள்பட 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தானை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மாரத்தானில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாரத்தானில் மாணவர்களுடன் அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story