செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்


செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்
x

கரூரில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர்

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதையொட்டி கரூர் மாநகராட்சி வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதி பேரணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் ஸ்கேட்டிங் வீரர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது தலைமை தபால் அலுவலகம், ஜவகர்பஜார், மனோகரா கார்னர் ரவுண்டானா வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவடைந்தது. பின்னர் திருவள்ளுவர் மைதானத்தில் மனித செஸ் போட்டியினை தொடங்கி வைத்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலமாக செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முதல்-அமைச்சர் பங்கு பெற்ற குறும்படத்தினை பார்வையிட்டார். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.


Next Story