பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நடந்தது.

பெரம்பலூர்

4 குறுவட்டத்திற்கும்...

பாரதியார் தின மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் (சதுரங்கம்) போட்டிகள் தனித்தனியாக நடந்தது.

பெரம்பலூர் குறுவட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் குறுவட்டத்திற்கு பாடாலூர் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை குறுவட்டத்திற்கு அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் குறுவட்டத்திற்கு பரவாய் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

சான்றிதழ்

இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். 6 சுற்றுகளாக நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த செஸ் போட்டிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

அடுத்த போட்டிகள்

வருகிற 14-ந்தேதி அரும்பாவூர் குறுவட்டத்திற்கு 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான பூப்பந்தாட்டம், வாலிபால் போட்டி அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. வருகிற 16-ந்தேதி பெரம்பலூர் குறு வட்டத்திற்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஆக்கி போட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், ஆலத்தூர் குறு வட்டத்திற்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், வேப்பந்தட்டை குறு வட்டத்திற்கு பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் குறு வட்டத்திற்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோ-கோ போட்டி பரவாய் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.


Next Story