நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.9 குறைந்தது


நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.9 குறைந்தது
x
தினத்தந்தி 27 Sep 2023 7:00 PM GMT (Updated: 27 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.9 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.97 ஆக குறைந்துள்ளது.

முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.97 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story