கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் கோழிகழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கி வருகிற 14-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடக்கும் இந்த முகாமில் ஆர்.டி.வி.கே. தடுப்பூசி மருந்து ரூ.1.632 லட்சம் டோஸ்கள் செலுத்த நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்டத்தில் கோழி வளர்ப்போர் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story