சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு: தீட்சிதர்கள் எதிர்ப்பு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு: தீட்சிதர்கள் எதிர்ப்பு
x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து வரும் அறநிலையத்துறை ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளதாகவும் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து, சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவிலில் ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை என தீட்சிதர்கல் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோயிலில் 2009-ல் நடந்த கணக்கு தனிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story