சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்று ஆய்வு
அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று 2வது நாளாக மீண்டும் ஆய்வு செய்ய உள்ளது .
சிதம்பரம்,
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி நடராஜரை தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதை அறிந்த தமிழக அரசு, கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்தது. அதன்பேரில் போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டு வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையின் அதிகாரிகள் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ய சென்ற போது , மறுப்பு தெரிவித்து தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறையின் அதிகாரிகள் குழு இன்று 2வது நாளாக மீண்டும் ஆய்வு செய்ய உள்ளது .
Related Tags :
Next Story