சிதம்பரம்: ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


சிதம்பரம்:  ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

சிதம்பரம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடலூர்


கடலூர் மாவட்டம், சிதம்பரம் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த மாதம் 27ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான நேற்று இரவு, தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு விழா, பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாளை அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி, நிர்வாக அறங்காவலர், திரவுபதி அம்மன் கோவில் தெரு மக்கள் செய்திருந்தனர்.


Next Story