முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
x

தஞ்சையில், மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில், மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முன்னாள் அமைச்சர் மரணம்

தஞ்சையை சேர்ந்த முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரும், தி.மு.க. மாநில வர்த்தக அணி தலைவருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா(வயது 83) கடந்த 19-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் அடக்கம் நேற்று முன்தினம் நடந்தது.இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் சென்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

திருவாரூர் செல்லும் வழியில் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு தஞ்சையில் உள்ள உபயதுல்லா வீட்டுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திருநாவுக்கரசர், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

பின்னர் தஞ்சாவூர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சென்ற வழி நெடுகிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story