தி.மலையில் 600 படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தி.மலையில் 600 படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

திருவண்ணாமலையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி, குறுகிய காலத்தில் தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்லும் வகையில் மிகப்பெரிய மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதன்பின்னர் மருத்துவமனையை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.


Next Story