குமரி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையில் சிறப்பான வரவேற்பு
குமரி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் கொட்டும் மழையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் கொட்டும் மழையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் குமரி வருகை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோதோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலம் வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார்.
கொட்டும் மழையில் வரவேற்பு
அவருக்கு குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட எல்லையான காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்..
அப்போது செண்டை மேளம் முழங்க தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது இடையிடையே சாரல் மழையும் பெய்தது. ஆனாலும் தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர்கள்
குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோரும் நினைவு பரிசு வழங்கி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றனர்.
முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.என் நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரும் வந்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன். தில்லைச் செல்வம், தி.மு.க. மீனவர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான், துணை மேயர் மேரி பிரின்சி லதா, கவுன்சிலர்கள் எம்.விஜயன், இ.மேரி ஜெனட் விஜிலா, ஜெனிதா மதன், பி.சொர்ணத்தாய், விஜிலா ஜஸ்டஸ், எஸ்.அமல செல்வன், ஐ.எஸ்.கவுசுகி, அனந்தலெட்சுமி மாணிக்கராஜா, தோவாளை கிழக்கு ஒன்றிய செயலாளர் த.செல்வன், தலைமை கழக பேச்சாளர் லாயம் எஸ்.கே.ரகுமான், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.இம்மானுவேல், எஸ்.சீனிவாசன், ரமணா, சரத், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இ.என்.சங்கர்
குமரி மேற்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், முளகுமூடு பேரூராட்சி தலைவர் ஜெனுஷா ஆர்.ஜோன், பேரூர் இளைஞர் அணி பொறுப்பாளர் எல்.அஜித், மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.ராஜேஷ்குமார், பாகோடு பேரூர் செயலாளர் ராபின்சன்பாபு, அருமனை பேரூர் செயலாளர் ஜெ.ஜெகராஜ், களியக்காவிளை பேரூர் செயலாளர் டி.எல்.பபின்லால், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் ஞா.அருள்சோபன், பத்மநாபபுரம் நகர செயலாளர் எச்.ரயீஸ் சுபிகான், அவைத்தலைவர் கா.எட்வின் கிறிஸ்டல், துணை செயலாளர்கள் பி.வில்சன், கே.குமார், சுலைகாபேசம், பொருளாளர் எம்.ஸ்ரீராம், மாவட்ட பிரதிநிதி அ.வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.