காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 81-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி கார்கேவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்
"திரு.மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடினமான நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு. உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது." இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story