முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
கோவில்பட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் மத்திய, மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் மகாலட்சுமி கே. சந்திரசேகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே. பச்சமால், தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரா. ரமேஷ், மாவட்ட பிரதிநிதி முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான், தலைமை கழக பேச்சாளர்கள் மதுரை சாதுராஜன், தமிழ் பிரியன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story