முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்-ஆ.ராசா எம்.பி.பங்கேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்-ஆ.ராசா எம்.பி.பங்கேற்பு
x

திருவண்ணாமலையில் நடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி.பங்கேற்று பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி.பங்கேற்று பேசினார்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி தலைவரும் முதல்-அமைச்சருமடான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், விஜயலட்சுமிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நலஉதவிகளை வழங்கி துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''இன்று மதத்தால் உச்சகட்ட ஆபத்து உள்ளது. ஆபத்தை எதிர்த்து நிற்கவும், இந்தியாவில் மோடியை எதிர்க்கவும் தமிழக முதல்- அமைச்சரை தவிர வேறு யாரும் இல்லை.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டு மோடி பயப்படுகிறார். மேலும் தி.மு.க. தொண்டன் கட்டும் கருப்பு-சிவப்பு கரை வேட்டிக்கும் கூட மோடி பயப்படுகிறார். தமிழகத்தில் எங்களுக்கு எதிரிகள் யாரும் இல்லை. அதனால் இந்தியாவையும், இந்திய அரசியல் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய வேலை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றார்'' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், நகரமன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அய்யாகண்ணு, தமயந்தி ஏழுமலை, சாந்திபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஆராஞ்சி ஆறுமுகம், கோவிந்தன், ரமேஷ், சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story