தாயார் மறைவு; ஓ.பன்னீர்செல்வத்துடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு


தாயார் மறைவு;  ஓ.பன்னீர்செல்வத்துடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
x

File photo

தினத்தந்தி 25 Feb 2023 8:10 PM IST (Updated: 25 Feb 2023 8:23 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மறைவெய்தியதையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

இதற்கிடையே, முதல்-அமைச்சரின் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடலுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.


Next Story