முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந் தேதி வருகை
தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந் தேதி வருகிறார். அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்
தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந் தேதி வருகிறார். அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி வருகை தருகிறார். அங்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதற்கான விழா நடத்துவதற்காக தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானம், அதன் அருகில் உள்ள தனியார் இடம், அச்சம்பட்டியில் தனியார் இடம் ஆகிய இடங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று காலை பார்வையிட்டார்.
கலெக்டர்-எம்.எல்.ஏ.
அவருடன் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனித்துரை, மேலகரம் செயலாளர் சுடலை, குற்றாலம் செயலாளர் குட்டி, செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன் மற்றும் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர்கள் அறிக்கை
இது குறித்து மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ஏ.வி.ஆர்.எம்.வி. திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.
வருகிற 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தர இருக்கிறார். அந்த விழாவினை சிறப்பிப்பது சம்பந்தமாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
எனவே தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்நாள்-முன்னாள் நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர் அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.