ஈரப்பத நெல் கொள்முதல், நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை


ஈரப்பத நெல் கொள்முதல்,  நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
x

ஈரப்பத நெல் கொள்முதல், நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடக்க உள்ளது.

சென்னை,

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பயிடப்பட்டிருந்த நெல் பாதிப்படைந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இந்நிலையில்,

சேதமடைந்த நெல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்ரபாணி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆய்வுக்கான அறிக்கையை முதல்-அமைச்சரிடம் இன்று சமர்பிக்கின்றனர்.

இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிப்படைந்த நெல் குறித்த ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஏற்கனவே 22% வரை ஈரப்பதம் அடைந்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் முதல்-அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசின் 22% நெல் கொள்முதல் குறித்த பதில் குறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story