கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 2 Sept 2022 7:47 PM IST (Updated: 2 Sept 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

திருவனந்தபுரம்,

இந்த ஆண்டு தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை (சனிக்கிழமை) கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த சூழலில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கோவளத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு திராவிட மாடல் ( The Dravidian Model) என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வழங்கி பொன்னாடை அணிவித்தார்.

நாளை கூட்டம் அதைத்தொடர்ந்து இன்று மாலை கேரள அரசின் சார்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் தங்கும் அவர், நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார். கூட்டம் முடிந்ததும், நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.


Related Tags :
Next Story