முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி 1089 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி 1089 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளதாக :அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடன்குடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி 1089 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ெதரிவித்துள்ளார்.
கால்நடைத்துறை விழா
உடன்குடி தேரியூர் கால்நடைமருத்துவ வளாகத்தில் கால்நடைத்துறை சார்பில் பசுக்கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்குதல் தொடக்கவிழா, சினையுறா பசுக்களுக்கான சிகிச்சை மற்றும் கறவை பசுக்களில் மடிநோய் கண்டறிதல் முகாம் ஆகியவை தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு செட்டியாபத்துபஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணைஇயக்குனர் ராஜன் வரவேற்றார். சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பதிவாளர் டென்சிங்ஞானராஜ், யூனியன் தலைவர் பாலசிங், திருச்செந்துார் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தைடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இத்திட்டங்கள் குறித்து சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் விளக்கவுரையாற்றினார்.
கால்நடை மருத்துவர்கள் நியமனம்
இதில் பசுக்கன்றுபராமரிப்புபெட்டகம், சினையுறா பசுக்களுக்கான சிகிச்சை மற்றும் கறவைப்பசுக்களில் மடிநோய்கண்டறிதல் முகாமினை தொடங்கி வைத்து அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
கால்நடை பராமரிப்பு தொழில் கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு இணைந்த தொழிலாகும். கால்நடைகளை வளர்ப்பது பொருளாதார முன்னேற்த்தை உறுதி செய்யும். இதன் முக்கியதுவத்தை அறிந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கால்நடைகளின் உடல்நலத்தை பேணும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளார். அவரது ஆலோசனைப்படி புதிதாக 1089 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கால்நடை நோய்த்தடுப்பு நிலையத்தை உலகத்தரத்திற்கு இணையாக தேவைப்படும் அனைத்து தடுப்பூசிகளும் தமிழகத்திலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பாக கால்நடைகளை பாரமரிப்பு செய்து வருபவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
இவ்விழாவில் திருச்செந்துர்நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் தலைவர் சுரேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம மற்றும் பலர் கலந்து கொண்டனர்