ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய போலீஸ்காரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய போலீஸ்காரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவரை ரெயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் சரவணன் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கைத்தாங்கலாக தூக்கி ரெயில் பெட்டியில் ஏற்றி விட்டார். அவருடைய இந்த மனிதநேய பணியை சக பயணி ஒருவர் 'வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இதையடுத்து போலீஸ்காரர் சரவணனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 'வீடியோ' காட்சியை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு, ' சக உயிருக்கு உதவுவதை காட்டிலும் பேரின்பம் எதுவுமில்லை. ரெயில்வே பாதுகாப்பு காவலர் சரவணனின் நல்லுள்ளம் போற்றத்தக்கது. பாராட்டுகள். வலிவற்றோருக்கு நமது வலிமை பயன்படட்டும். மானிடம் தழைக்கட்டும்' என்று பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story