எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட தமிழருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட தமிழருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
சென்னை,
சென்னையை அடுத்த கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (வயது 27) என்ற வாலிபர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்துக்கு திரும்பியுள்ளார். அவருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச்செய்கிறார்கள். அந்தவகையில், கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story