இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இன்று தலைமைச் செயலகம் செல்கிறார்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 July 2022 2:35 AM GMT (Updated: 22 July 2022 2:57 AM GMT)

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வந்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கடந்த 12-ந்தேதி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் 14-ந்தேதியன்று காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த அவர் 18-ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அன்று தலைமைச்செயலகத்துக்கு வந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கை செலுத்தினார். சில நாட்களாக தலைமைச்செயலகத்திற்கு வராமல் முகாம் அலுவலகத்தில் இருந்தபடி அரசு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்திற்கு வருகிறார். இன்று காலை 10.30 மணிக்கு நிதித்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.


Next Story